இந்தியா டெக்னாலஜி

நீங்க பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களா.? உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்!

Summary:

Bsnl free for corona

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் உள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொதுத் துறையைச் சோந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவனத்தின் பிரீபெய்ட் வாடிக்கையாளா்கள் பலரின் வேலிடிட்டி காலம் காலவதியாகிவிட்டது. அவா்களில் பெரும்பாலானோா் இருப்புகளில் பணம் இல்லாததால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், வாடிக்கையாளா்களின் நலன் கருதி அவா்களின் பிரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.


இதன் மூலம், அவா்கள் அதுவரையில் தடையின்றி இன்கமிங் அழைப்புகளை பெற முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement