Bike-ன் Mileage அதிகரிக்க இந்த 5 விஷயங்களை மட்டும் மறக்காமல் செய்யுங்கள்.. பெட்ரோல் செலவை ஈஸியா குறைக்கலாம்.!



5-simple-tips-to-improve-your-bikes-mileage

பைக்கின் Mileage குறைந்து அதிகமாக பெட்ரோல் செலவாகிறதா? சில அடிப்படை பழக்கங்களை சரியாக பின்பற்றுவதன் மூலம் பைக்கின் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி பெட்ரோல் செலவை குறைக்க உதவும்.

வேகத்தை கட்டுப்படுத்துங்கள் :

பைக்கை தேவையில்லாமல் அதிக வேகத்தில் ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கலாம். சாலையின் சூழ்நிலைக்கு ஏற்ற நிலையான வேகத்தில் பயணம் செய்வது எரிபொருளை சீராக பயன்படுத்த உதவும். குறிப்பாக அடிக்கடி வேகத்தை அதிகரித்து, திடீரென பிரேக் போடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: தவறுதலாக UPI-ல் பணம் அனுப்பிவிட்டீர்களா? பதற்றப்பட வேண்டாம்… உடனே இதை செய்யுங்கள்!

யர் பிரஷர் :

பைக்கின் Tyre-ல் காற்றின் அளவு சரியாக இல்லாவிட்டாலும் Mileage பாதிக்கப்படலாம். காற்று குறைவாக இருக்கும் டயரில் வாகனத்தை இயக்கும்போது, சக்கரத்தின் உராய்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே sசரியான அளவில் Tyre Pressure இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிப்பது முக்கியம்.

என்ஜின் மைண்டெனன்ஸ் :

Bike Mileage

பைக்கின் Engine சரியாக பராமரிக்கப்படுவதும் Mileage-க்கு முக்கியமானது. Engine Oil, Air Filter உள்ளிட்டவற்றை சரியான கால இடைவெளியில் பரிசோதித்து தேவையான பராமரிப்பை செய்வது வாகனத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவும். நீண்ட நாட்கள் Maintenance செய்யாமல் இருப்பது வாகனத்தின் செயல்திறனை பாதிக்கலாம்.

தேவையில்லாத காத்திருப்பு :

பைக் ஓடாமல் நீண்ட நேரம் Engine-ஐ இயக்கிக்கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக யாருக்காகவாவது காத்திருக்கும்போது அல்லது நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலையில் தேவையில்லாமல் Engine-ஐ இயக்கி வைப்பதால் எரிபொருள் வீணாகலாம். தேவையான நேரத்தில் மட்டும் Engine-ஐ இயக்குவது பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்த உதவும்.

சீரான வேகம் :

பைக்கை சீராகவும் கவனமாகவும் ஓட்டுவது Mileage-ஐ பாதுகாக்கும் முக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். திடீர் Acceleration, தேவையற்ற Braking மற்றும் அடிக்கடி வேக மாற்றங்களை குறைத்து சீரான முறையில் பயணம் செய்வது எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உதவும். பைக்கை சரியாக பராமரித்து, ஓட்டும் முறையிலும் கவனம் செலுத்தினால் தினசரி பெட்ரோல் செலவை ஓரளவு குறைக்க முடியும்.