போதை காளானை தேடி வனப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள்; வழி தெரியாமல் தவித்த பரிதாபம்... 3 நாட்களுக்கு பிறகு மீட்பு

போதை காளானை தேடி வனப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள்; வழி தெரியாமல் தவித்த பரிதாபம்... 3 நாட்களுக்கு பிறகு மீட்பு



Youths who went to the forest in search of narcotic mushrooms; Pity stranded... Rescued after 3 days.

போதைக்காளான் தேடி கொடைக்கானல் காட்டிற்குள் சென்ற இளைஞர்கள் திரும்பி வர வழி தெரியாமல் மூன்று நாட்கள் காட்டிற்குள்ளே சிக்கிக் கொண்டனர். 

கொடைக்கானல். காடுகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை காளானை, போதைக் காளான் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வகை காளான்களில் "சிலோசைப்பின்" என்கிற போதை தரும் வேதி பொருள் உள்ளது. எனவே இந்த போதை காளான், கறுப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த போதை காளான்களை சாப்பிட்டால் 8-லிருந்து 12 மணி நேரம் வரை போதை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இந்த போதை காளானை வாங்குவதற்காகவே, கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். 

கேரளாவை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். மேல்மலை கிராமமான பூண்டியில் உள்ள‌ த‌ங்கும் விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். அப்போது, அவர்களுக்கு போதை காளான்க‌ளை சிலர் விற்பனை செய்துள்ளனர். 

அதை உட்கொண்ட இளைஞர்கள், போதைக் காளானை தேடி வனப்குதிக்குள் சென்றுள்ளனர். ஐந்து பேரில இருவர் மட்டும் போதை காளானை தேடி அட‌ர்ந்த‌ வனப்பதிக்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் திரும்பி வரும் வழியை மறந்து விட்டனர். 

மற்ற மூவரும் திரும்பி வந்த நிலையில் இரண்டு நாட்கள் கடந்தும் காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வராததால், நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல்துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் இணைந்து அவர்களை வனப்பகுதிக்குள் சென்று தேடினர்.

வன பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர்கள், அந்த இளைஞர்களை பார்த்து ஊருக்குள் அழைத்து வந்து உண‌வு, ம‌ற்றும் த‌ண்ணீர் கொடுத்து அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கேரளா இளைஞர்களுக்கு போதை காளான் விற்பனை செய்தது, பூண்டி கிராமத்தை சேர்ந்த சசிகுமார், பாலையா, கோபால கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 100 கிராம் போதை காளான்க‌ளை பறிமுதல் செய்தனர்.