நல்ல வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்! நேர்த்திகடனால் நேர்ந்த விபரீதம்

நல்ல வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்! நேர்த்திகடனால் நேர்ந்த விபரீதம்


Youth commit suicide to full fill his prayer with god

வேலைகிடைத்த மகிழ்ச்சியில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசுவாமி. இவரது மகன்  நவீன். 32 வயதாகும் நவீனுக்கு சிறுவயது முதலே கடவுள் மீது அதீத பக்தி மற்றும் நம்பிக்கை இருந்துள்ளது. இந்நிலையில் என்ஜினியரிங் படித்துவிட்டு நீண்ட நாட்களாக வேலை தேடி அழைத்துள்ளார் நவீன்.

மேலும் வங்கி தேர்வுக்கும் படித்துவிட்டு அது சம்மந்தமான தேர்வுகளையும் எழுதி வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் தனக்கு வேலை கிடைத்தால் தனது உயிரை காணிக்கையாக தருவதாக நவீன் கடவுளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் வேண்டியவாறு அவருக்கு சமீபத்தில் வேலை கிடைத்துள்ளது. மும்பையில் உள்ள பேங்க் ஆஃப்  இந்தியா வங்கியில் வங்கி உதவி மேலாளராக பணிக்கு சேர்ந்துள்ளார் நவீன். வேலைக்கு சேர்ந்து 15 நாட்கள் ஆனநிலையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் அங்கிருந்து கிளம்பி தனது நபரை பார்த்து பேசிவிட்டு, பின்னர் தனது சகோதரருக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருக்கும் தகவலை கூறியுள்ளார்.

பின்னர் பேருந்து மூலம் நாகர்கோவில் வந்த அவர் புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே ட்ராக்கிற்கு சென்று அங்கு வந்த ரயில் மும்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன், நினைத்த வேலை கிடைத்திவிட்டதால்  நேர்த்தி கடனை செலுத்தி இறைவனிடம் செல்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் நவீன்.

இதனை அடுத்து நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் நவீன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்க்கு தெரிவித்துள்ளனர். முதலில் இதனை நம்ப மறுத்த அவர்கள் பின் விசாரித்ததில் மகன் தற்கொலை செய்துகொண்டது உண்மைதான் என தெரிந்து கதறி அழுதுள்ளன்னர்.

வேலை கிடைக்கவில்லை என பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், நல்ல வேலை கிடைத்ததால் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுத்தியுள்ளது.