காதலியோடு ஓட்டம்பிடித்து திருமணத்தை முடித்த இளைஞன்! பெண் வீட்டாரால் நடுரோட்டில் அவரது அம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்!!

காதலியோடு ஓட்டம்பிடித்து திருமணத்தை முடித்த இளைஞன்! பெண் வீட்டாரால் நடுரோட்டில் அவரது அம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்!!


youngman-mother-attack-by-her-lover-family

கள்ளக்குறிச்சி எஸ்.கொளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். முடி திருத்தும் வேலை செய்துவரும் இவரது மகன் சூர்யா. இவர் ஐடி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அதனால் அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வசித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார்கள் மற்றும் உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

marriage

மேலும் அவ்வப்போது சூர்யாவின் வீட்டிற்கு சென்று தகராறும் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கும்பலாக சேர்ந்து அவரை நடுரோட்டில் இழுத்து வந்து மிதித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தகவல் அறிந்த போலீசார்கள் பெண்ணின் தாய் மற்றும் தந்தை, உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.