காதல் மனைவியின் முகத்தை கடைசியாக ஒரு தடவ கூட பார்க்கல! தூக்கில் தொங்கிய இளைஞன்! வெளியிட்ட கண்ணீர் பதிவு!

காதல் மனைவியின் முகத்தை கடைசியாக ஒரு தடவ கூட பார்க்கல! தூக்கில் தொங்கிய இளைஞன்! வெளியிட்ட கண்ணீர் பதிவு!


YoungMan commit suicide after lovable wife dead

ஆவடி,  திருநின்றவூர் அருகே நடுக்குத்தகை திலீபன் நகரில் வசித்து வந்தவர் அரவிந்தராஜன். 26 வயது நிறைந்த இவர்  பட்டாபிராம்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பவித்ரா மற்றும் அரவிந்தராஜன் இருவருக்கும் நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்த நிலையில் கணவரை பிரிந்த பவித்ரா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் பிரபலமான ஜுவல்லரி ஒன்றில் வேலை பார்த்தும் வந்துள்ளார் இதற்கிடையில் பவித்ரா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் அரவிந்தராஜன்  விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுமாறு பவித்ராவிடம் கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா கடந்த 15ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Love

இந்நிலையில் தனது காதல் மனைவி பவித்ரா தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்த அரவிந்தராஜன் கதறி துடித்துள்ளார். மேலும் அவரை இறுதியாக பார்க்க வேண்டும் என அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பவித்ராவின் பெற்றோர்கள் அரவிந்தராஜனை பவித்ராவை பார்க்க அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்த அரவிந்தராஜன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில், நானும் பவித்ராவும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகொண்டோம். அவள் இறந்த போது கடைசியாக அவள் முகத்தை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. என்னால்  அவள் இல்லாமல் வாழ முடியாது. நானும் அவள் இருக்குமிடத்திற்கே தேடிபோகிறேன். எனது சாவுக்கு காரணம் பவித்ராவின் அம்மாவும் அவரது மாமாவும்தான் என பதிவு செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.