திருமணமான ஓரே வாரத்தில் இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்: காரணம் புரியாமல் கலங்கும் பெற்றோர்..!

திருமணமான ஓரே வாரத்தில் இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்: காரணம் புரியாமல் கலங்கும் பெற்றோர்..!


young woman committed suicide within a week of her marriage

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுக்கூரை பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று குளிக்க செல்வதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்ற சந்தியா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சந்தியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரது கணவர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், திருமணமான 8 நாளில் சந்தியா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.