ரயிலில் உட்கார சீட் கிடைக்காததால், வெடிகுண்டுடன் கும்பல் இருப்பதாக கூறி போலீசாரையே பதறவைத்த இளைஞன்!

ரயிலில் உட்கார சீட் கிடைக்காததால், வெடிகுண்டுடன் கும்பல் இருப்பதாக கூறி போலீசாரையே பதறவைத்த இளைஞன்!


young-man-wrong-information-for-train-seat


கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் அன்ரிசர்வ் பெட்டியில் திருச்சி முசிறியை சேர்ந்த பிரேமானந்த் என்ற இளைஞர் எறியுள்ளார்.

அப்போது பிரேமானந்த்திற்கு ரயிலில் அமர்வதற்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் நின்றபடியே பயணித்த பிரேமானந்த், விரக்தியடைந்து, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இறங்கி விருத்தாசலம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் முன்பதிவில்லாத பெட்டியில் வடமாநில கும்பல் வெடிகுண்டுகளுடன் பயணிப்பதாக கூறியுள்ளார்.

train

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், விழுப்புரம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறிது நேரத்தில் விழுப்புரத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பிட்ட அந்த பெட்டியில் ஏறி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அந்த பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த யாரும் பயணிக்கவில்லை.

இதனையடுத்து பிரேமானந்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனக்கு ரயிலில் சீட் கிடைக்காததால் பொய்யான தகவலை கூறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை கூறிய பிரேமானந்த்தை விசாரித்துவருகின்றனர்.