வங்கி பணம் வட்டி தரும். ஆனால் வாய்பசிக்கு ரொட்டி தருமா.? விவசாயம் காக்க இளைஞன் வெளியிட்ட மெய்சிலிர்க்கும் வீடியோ.!

வங்கி பணம் வட்டி தரும். ஆனால் வாய்பசிக்கு ரொட்டி தருமா.? விவசாயம் காக்க இளைஞன் வெளியிட்ட மெய்சிலிர்க்கும் வீடியோ.!



young man speech for agriculture

தற்காலத்தில் விவசாயங்கள் பெருமளவில் அழிந்துவரும் நிலையில் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமாக சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

துரைப்பாண்டி என்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் விவசாயத்தை காப்போம் என்ற தலைப்பில் கவிதை வடிவில் கூறியதாவது, நிலங்கள் வீடாகின. கலங்கள் காடாகின. உரிமைக்காக பிச்சை எடுத்தோம் 200 ஆண்டு. இனி உணவுக்காக பிச்சை எடுப்போம் எத்தனை ஆண்டு? சிற்பங்கள் அழிந்துவிட்டால் கோவிலுக்கு சிறப்பு இல்லை. சிற்பிகள் அழிந்துவிட்டால் கோவிலுக்கே பிறப்பில்லை.

விவசாயம் அழிந்துவிட்டால் உண்ணக்கூட வழி இல்லை. விவசாயம் அழிந்துவிட்டால் வறண்டபின் பயனில்லை. ஏர் போன நிலையால், இன்று கூறுபோடும் மனைகள் ஆயின. நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போட்டால், வங்கி பணம் வட்டி தரும். ஆனால் வாய்பசிக்கு ரொட்டி தருமா? ஆகையால் இன்றைய இளம் தலைமுறையாக உள்ள எனது அண்ணன்மார்களும், அக்காமார்களும், எனது மாமன்மார்களும், அடுத்த பத்தாண்டில் இளைஞர்களாக வரக்கூடிய எனது நண்பர்களும் இன்றைய தினமே விவசாயத்தை மீட்போம்.

விவசாயத்தை காப்போம். விவசாயம் செய்வோம். விவசாயம் செய்ய பழகுவோம். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். விவசாயம் செழிக்கட்டும். நமது இந்திய நாடு மேலும் மலரட்டும். என கூறியுள்ளார். அந்த சிறுவன் தலையில் துண்டை கட்டிக்கொண்டு, கழுத்தில் மண்வெட்டியை மாட்டிக்கொண்டு எதார்த்தமாக பேசியுள்ளான். சிறுவன் துரைபாண்டி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.