"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஆசையாக பேசி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.." சாதியை காட்டி திருமணத்திற்கு மறுப்பு.! பாய்ந்த போக்சோ.!
அரியலூர் மாவட்டத்தில் சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மேலசம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கூறிய போது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்திருக்கிறார் துரை. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் துரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.