தமிழகம் காதல் – உறவுகள்

வீட்டிற்குள் அடைத்து, உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளைஞன்.! வெளியான நெஞ்சை உருக்கும் பகீர் சம்பவம்!!

Summary:

young man killed for intercaste love

உத்திரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தில் வசித்து வந்தவர் அபிஷேக். 19 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் வசித்த வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேக்கின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக உறவினர் ஒருவரிடமிருந்து அபிஷேக் பணம் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். 
அப்பொழுது அபிஷேக்கின் காதலி அவருக்கு போன் செய்து வர கூறியுள்ளார். அபிஷேக்கும் அவரைக் காண்பதற்காக சென்றுள்ளார்.

Image result for illegal affairs

அப்பொழுது அப்பெண்ணின் உறவினர்கள் அபிஷேக்கை பிடித்து தனிஅறையில் அடைத்துள்ளனர். பின்னர் அந்த அறைக்கு தீவைத்து உயிருடன் கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் உடல் எரிந்து, அபிஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அபிஷேக்கின் குடும்பத்தினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அபிஷேக்கின் காதலி அவரது மாமா மற்றும் அத்தையை  கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் செல்லும் வழியிலேயே அபிஷேக் உயிரிழந்துவிட்டார். சம்பவம் அறிந்த அபிஷேக்கின் உறவினரான ராஜு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண், அவரது மாமா மற்றும் அத்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement