இளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம்.! வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி!! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

இளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம்.! வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி!!

நெல்லை மாவட்ட கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகும்நிலையில் அவர்களுக்கு தற்போது மூன்று மாத கைக்குழந்தை உள்ளது.

 இந்நிலையில் நேற்று இரவு மணிகண்ணன் தனது நண்பர்களுடன் ஆற்றுப்பாலம் பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 6 பேர் மணிகண்டனின் காலில் அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளன.ர் அதனை தொடர்ந்து மின்னல் வேகத்தில் மணிகண்டனின் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் அவரது தலை துண்டாகி விழுந்தது.அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  இதனை கண்ட மற்ற இரு நண்பர்களும் சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது மணிகண்டன் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த வேறு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள், இப்பகுதியை கடந்து சென்றபோது அவர்களது சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்ததும், அவர் ஏற்கனவே  சாதித் தலைவருக்கு ப்ளக்ஸ் வைத்து கிழிக்கப்பட்ட பிரச்சனையில்  சிலரை தாக்கியிருப்பது தெரியவந்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாகவே மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது .

     à®ªà®¤à®±à¯à®±à®®à¯

 இதனை தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு மணிகண்டனின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கணவனை இழந்து கைக்குழந்தையோடு மணிகண்டனின் மனைவி கதறிய சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo