தமிழகம்

காதலியை இரண்டு முறை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு டிமிக்கி கொடுத்த காதலன்! காதலி எடுத்த அதிரடி முடிவு!

Summary:

young man cheate young girl


சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞர் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவரி காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அரவிந்த், அந்த பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பமடைய வைத்துள்ளார்.

இந்த சம்பவம் அரவிந்த் குடும்பத்திற்கு தெரியவந்து அவரது குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அரவிந்திற்கும், இளம்பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அரவிந்த் தாக்கியதில் பெண்ணிற்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர்.

marriage க்கான பட முடிவு

இதனையடுத்து சில மாதங்கள் கழித்து மீண்டும் அரவிந்த், அந்த பெண்ணை சந்தித்து, இனி யாருக்கும் பயப்பட வேண்டாம் நாம்  திருமணம் செய்து கொள்வோம் என ஆசை வார்த்தை கூறி மீண்டும் அந்த பெண்ணை கற்பமாகியுள்ளார். ஆனால் மீண்டும் அரவிந்த் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement