கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீரிலிருந்து வந்த துர்நாற்றம்... நீர்தேக்க தொட்டியை எட்டி பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீரிலிருந்து வந்த துர்நாற்றம்... நீர்தேக்க தொட்டியை எட்டி பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!


Young man body kept inside of water tank

விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இது குறித்து ஊர் மக்கள் அழைத்த புகாரின் அடிப்படையில் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை ஏறி சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆண் நபரின் சடலம் ஒன்று கிடந்துள்ளார்.

உடனே இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீர்தேக்க தொட்டியில் கிடந்த ஆண் நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Young man body

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த நபர் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரின் மகன் சரவணக்குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் யார் அவரை கொலை செய்து இங்கு வந்து போட்டுள்ளனர் என்பது தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.