தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் தனியாக வந்த இளம்பெண்.! டெலிவரி நிறுவன ஊழியர் செய்த மோசமான செயல்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

Summary:

அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் தனியாக வந்த இளம்பெண்.! டெலிவரி நிறுவன ஊழியர் செய்த மோசமான செயல்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’டில் பெண்ணிடம் அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  35 வயது நிரம்பிய பெண் ஒருவர் வீட்டு வேலை செய்துவந்துள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அவருடன் அதே வளாகத்தில் உள்ள தனியார் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் விக்னேஷ் என்பவரும் லிப்டில் வந்துள்ளார்.

அந்த லிப்டில் இருவர் மட்டுமே இந்தநிலையில் அப்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து விக்னேசை வளாகத்தில் உள்ளவர்கள் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேசை கைது செய்தனர்.


Advertisement