தமிழகம்

எனக்கு கொரோனா இருக்கு.! பஸ்ல இருந்து இறக்கி விடுங்க. பீதியை கிளப்பிய இளம் பெண்..! விசாரணையில் வெளியான பகீர் உண்மை.!

Summary:

Young girl said i have corono in bus to celebrate birthday party

தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி, இளம் பெண் ஒருவர் பேருந்தில் பீதியை கிளம்பியதும், பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கும்படி கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100 கும் மேற்ப்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், மேல்மருவத்தூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், திடீரென எழுந்து, தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், தன்னை பேருந்தில் இருந்து இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து நடத்துனர், பேருந்தை நிறுத்தி அந்த பெண்ணை கீழே இறக்கிவிட்டார்.

பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண் பேருந்துக்கு பின்னால் வந்துகொண்டிருந்த காரில் ஏறி கிளம்பியுள்ளார். அந்த பெண் கூறியதை கேட்டு பீதி அடைந்த சக பயணிகள் பேருந்தை மருத்துவமனைக்கு திருப்பி தங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யுமாறு நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குழம்பிப்போன பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்மந்தப்பட்ட பெண்ணை எப்படியோ பிடித்து, அவரிடம் விசாரித்ததில், நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாட செல்ல வேண்டும் என்பதற்கு தான் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

போலீசார் நடந்ததை பேருந்தில் இருந்த பயணிகளிடம் கூற, அதன்பின்னரே பயணிகள் அனைவரும் நிம்மதியுடன் பேருந்தில் ஏறி சென்றனர்.


Advertisement