இன்ஸ்டாகிராம் மோகத்தில் காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 22 வயது இளம்பெண்... கணவரிடம் ஒப்படைத்த போலீசார்!!Young girl escaped for her house to see Instagram boy friend

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தனிமையில் வசித்து வந்த சிந்துவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் கேரளாவை சேர்ந்த சமித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

சமித் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நூற்பாலையில் மேலாளராக தான் பணியாற்றி வருவதாக சிந்துவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி சிந்து தனது காதலனை காண திண்டுக்கல் வந்துள்ளார். அங்கிருந்து தனது காதலன் சொன்ன இடத்திற்கு வந்து தேடிள்ளார். அங்கு காதலன் கிடைக்காததால் மன வேதனையில் இருந்த சிந்து இன்ஸ்டாகிராம் தோழியான வேடசந்தூர் ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில் தங்கி நுற்பாலையில் வேலைக்கு சென்று கொண்டே காதலனை தேடியுள்ளார். 

Instagram boy friend

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது காதலன் சமித்துக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் அவர் கொத்தனார் என்ற‌ தகவலும் சிந்துவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டில் வேலை செய்யும் சிந்துவின் கணவர் போலீசில் சிந்துவை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

போலீசாரின் சிந்துவின் புகைப்படத்தை தமிழ் நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு அனுப்பி வைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிந்து வந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி அறிவுரை கூறி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.