கால்வாயில் அரை நிர்வாண கோலத்தில் மிதந்த இளம்பெண்!
கால்வாயில் அரை நிர்வாண கோலத்தில் மிதந்த இளம்பெண்!

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். முடியை பாப் கட்டிங் செய்துள்ளார். இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அரை நிர்வாண ஆடையில் கிடந்ததால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மீட்கப்பட்ட இளம்பெண் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.