தமிழகம் Covid-19

தஞ்சாவூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! இன்று தஞ்சையில் இளம் சிறுமி கொரோனாவிற்கு பலி!

Summary:

young girl died in thanjavur for corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 75 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே தீவிரமாக பரவி வந்த இந்த கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் தீவிரமடைந்து வருகிறது. 

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,245 ஆக உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

அந்த சிறுமிக்கு கடந்த 19ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.  தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement