தமிழகம்

ஆசையுடன் விளையாட சென்ற சிறுமி.! கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாப பலி.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

ஆசையுடன் விளையாட சென்ற சிறுமி.! கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாப பலி.! அதிர்ச்சி சம்பவம்.!

காஞ்சிபுரம் மாவட்டம் முதலியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த பலராமன் என்பவரின் 8 வயது மகள் ஸ்ரீமதி அவர்களது மல்லிகை தோட்டத்திற்கு சென்று தினமும் விளையாடுவது வழக்கம். நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக அவர்களது மல்லிகை தோட்டத்தின் வழியே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து, மல்லிகைப்பூ தோட்டத்திற்குள் விழுந்து கிடந்துள்ளது.

இந்தநிலையில் சிறுமி வழக்கம்போல அவர்களது மல்லிகை தோட்டத்திற்கு சென்றுள்ளார். மின்கம்பி அறுந்து கிடந்ததை அறியாத சிறுமி ஸ்ரீமதி, தனது தோட்டத்தின் உள்ளே சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பி சிறுமியின் மீது பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் மின்சாரவாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement