#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
கணவன் வீட்டாரின் கொடுமையால் இளம்பெண் விபரீத முடிவு... திருமணமான 3 வருடத்தில் துயரம்..!
கணவன் வீட்டாரின் கொடுமையால் இளம்பெண் விபரீத முடிவு... திருமணமான 3 வருடத்தில் துயரம்..!

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரின் மகள் இலக்கியா (வயது 29). மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் மலைக்கோவிலை சார்ந்தவர் பாண்டியராஜ். பாண்டியராஜுக்கும், இலக்கியாவுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தம்பதிகளுக்கு 2 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த நிலையில், பாண்டியராஜ் வீட்டில் வரதட்சனை கேட்டு தகராறு செய்ததாக தெரிய வருகிறது. இதனால் இலக்கியா மனமுடைந்து காணப்பட்ட நிலையில், வாழ்க்கையில் விரக்தியுற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த இலக்கியாவின் பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையில் புகாரளித்தனர்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் இலக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளேயாவதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.