தமிழகம்

2 வருஷம் காத்திருந்தும் பயன் இல்ல.!! மருமகள் சொன்ன ஒத்த வார்த்தை.. அதுவே அவருக்கு எமனாக வந்த சோகம்..

Summary:

கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி வந்த இளம்பெண், கணவரின் குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்ததால்,

கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி வந்த இளம்பெண், கணவரின் குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்ததால், பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார். இவருக்கும் கனிமொழி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றநிலையில், தற்போதுவரை இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கனிமொழியின் மாமியார் கனிமொழியை திட்டியும், அவரிடம் சண்டை போட்டும் வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் மாமியாருக்கு பயந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தாரிடம் பொய் கூறியுள்ளார் கனிமொழி. ஒருகட்டத்தி சந்தேகமடைந்த கனிமொழியின் கணவர், கனிமொழியை பரிசோதனைக்காக அழைத்துசென்றுள்ளார். அங்கு சென்றதில், கனிமொழி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இதனால் பயந்துபோன கனிமொழி, தனது கணவரின் குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்துவிட்டதால் என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement