குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
உடல் நிலை சரி இல்லை.! திருமண வாழ்க்கைக்கு என் உடல் ஒத்துழைக்காது..! இளம் பெண்ணின் பகீர் முடிவு!
உடல் நிலை சரி இல்லை.! திருமண வாழ்க்கைக்கு என் உடல் ஒத்துழைக்காது..! இளம் பெண்ணின் பகீர் முடிவு!

திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் பிரதீபா. 20 வயதாகும் பிரதிபாவுக்கு பெற்றோர் திருமணம் முடிவு செய்து அதன்படி வரும் ஜனவரி 30 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்காக பிரதிபாவின் தந்தை ரவிச்சந்திரன் ஊர் ஊரக அழைத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் பிரதீபாவை திடீரென காணவில்லை. இதுகுறித்து தேடியதில் பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம் ஓன்று சிக்கியுள்ளது. அதில், அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால், என்னால் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழமுடியுமா என்று தெரியவில்லை.
இதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். மேலும், எனது நடத்தையில் சந்தேகப்பட வேண்டாம். காதல் விவகாரமோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ நான் இந்த முடிவை எடுக்கவில்லை, என்னை யாரும் தேடவேண்டாம் என எழுதியுள்ளார்.
இதனிடையே பிரதிபாவின் உடல் ஊரில் உள்ள குளத்தில் மிதப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ப்ரதிபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.