திருமணம் முடிந்து இரண்டே வருடம்..! கணவன் வீட்டில் இல்லாதபோது மனைவி செய்த காரியம்..! கதறும் பெற்றோர்..!



young-girl-commit-suicide-after-2nd-years-of-marriage

திருமணம் முடிந்த இரண்டே ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேவிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், சேலத்தைச் சேர்ந்த ராமு என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்தபிறகு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள உள்ள மெய்யபுரத்தில் கணவன் மனைவி இருவரும் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது.

dead

இந்நிலையில் சீனிவாசன் வீட்டில் இல்லாத நேரத்தில் ராமு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த ப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.