தமிழகம்

லட்ச ரூபாய் சம்பளம்! ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு, இளம்பெண் படைத்த மாபெரும்சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

young girl archana got state first place in group 1 exam

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்ற நிலையிலும், அரசுப் பணியின் மீது இருந்த பெரும் ஆர்வம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு குரூப்-1 தேர்வுக்கு தீவிரமாக தயாரானார்.

மேலும் குரூப் 1 தேர்விற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தேர்வில் முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இது குறித்து அர்ச்சனா பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்த தேர்விற்காக நான் தினமும் 10 மணிநேரம் படித்துள்ளேன். மேலும் எனது குடும்பமும் முழு ஒத்துழைப்பு அளித்ததால் எனது முயற்சி வீண் போகாமல் நான் முதல் முயற்சியிலேயே முதலிடத்தில் வெற்றி பெற்றேன். தகுந்த திட்டமிடுதல் மற்றும் அயராத உழைப்பு இருந்தால் போதும் நிச்சயம் எந்தவிதமான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம் என அர்ச்சனா கூறியுள்ளார்.
 


Advertisement