காதலியின் பிரிவால் உயிரை விட்ட இளம் இயக்குனர்!. சோக சம்பவம்!.



young director suicide for his lover death


சென்னை விருகம்பாக்கம், யாதவாள் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் மணி (23), இவர் பிரபல சினிமா இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மணி அவரது வீட்டில், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மணி இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது கிடைத்தது அதில் “நீ இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை” என்று எழுதியிருந்தார்.

                    suicide

மணி அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. எனவே காதலி இறந்த துக்கம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.