வெளிநாட்டிற்கு சென்ற தந்தை! மகனுக்கு சித்தியுடன் ஏற்பட்ட தவறான உறவு! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!
விழுப்புரம் மாவட்டம் அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் இவருக்கு சரத்குமார் மற்றும் சிவக்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சிவகுமார் கடந்த 26 ஆம் தேதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிவக்குமாரின் சடலத்தை போலீசார் கைப்பற்றிய போது அந்த இடத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் வீட்டருகில் சென்று நாய் படுத்து கொண்டது.

விசாரணையில் சிவக்குமாரின் தந்தை கேசவன் வெளிநாட்டிற்கு சென்று விட்டதால், கேசவனின் மூத்த மகன் சரத்குமாருக்கு, அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது தங்கை பார்த்து விட்டதால் உடன் பிறந்த தங்கையையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சரத்குமார்.
இந்தநிலையில் சரத்குமார் தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை சிவக்குமார் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவகுமார் வெளியில் இதுபற்றி கூறிவிடுவான் என நினைத்து, சிவகுமாரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தம்பி என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார். இதற்கு அவனது சித்தியும், தங்கையும் சரத்குமாருக்கு உதவி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.