ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம்.! பேரதிர்ச்சியில் பெற்றோர்.! போலீசார் அதிரடி நடவடிக்கை.!

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம்.! பேரதிர்ச்சியில் பெற்றோர்.! போலீசார் அதிரடி நடவடிக்கை.!


young boy kidnapped young girl and married her

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை திடீர் நகரை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் சுதாகர். 20 வயது நிரம்பிய இவர் கூலி தொழில் செய்துவந்துள்ளார். இந்தநிலையில், சுதாகர் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று, கடந்த 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

young girl

இந்தநிலையில், குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த சுதாகரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.