ரயிலில் கும்பலாக படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள்.! திடீரென கேட்ட அலறல் சத்தம்.! பரிதாபமாக போன உயிர்.!

ரயிலில் கும்பலாக படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள்.! திடீரென கேட்ட அலறல் சத்தம்.! பரிதாபமாக போன உயிர்.!


young boy died in train

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா என்பவரின் மகன் வெங்கடேஷ் அவருடைய நண்பர் விஜய் இவர்கள் இருவரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இவர்கள் இருவரும் கல்லூரி முடிந்து  தங்கள் வீட்டிற்கு கிளம்பியுள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயிலில் சக மாணவர்களுடன் சென்றுள்ளனர். மாணவர்கள் அனைவரும் கும்பலாக ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பெரம்பூர் லோகோ-கேரேஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் வெங்கடேஷ், விஜய் இருவரும் ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இதனால் அதி்ர்ச்சி அடைந்த சகமாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெங்கடேஷ் மறைவு செய்தியறிந்து அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.