
young boy died for corona
தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்த வயது உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த அச்சிறுவனுக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.
சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் நேர்ந்துள்ள இளம் வயது இறப்பு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும் என சிகிச்சையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Advertisement
Advertisement