ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!young boy arrested in pocso act

சென்னையில்17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை 31ம் தேதி முதல் தன் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்  அளித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞருடன் சென்றது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு, வ.உ.சி.நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் 22, என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை திருமணம் செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். 

விசாரணையில், இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும், அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.