தமிழகம்

ஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட காதலன்! பதறிப்போன குடும்பத்தினர்!

Summary:

young boy arrest for photo share


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி செல்போன் விற்பனை கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் இருவரும் பின்னர் காதலர்களாக பழகியுள்ளனர். மேலும் அவர்களின் பழக்கம் நெருக்கமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கலையரசன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண்ணை வலியுறுத்தி வந்துள்ளார்.இதன் காரணமாக அந்தப் பெண் கலையரசன் உடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.  

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் அவர்கள் தனிமையில் இருந்தபோது காதலியை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அப்பெண்ணின் பெண்ணின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். 

இதனையடுத்து கலையரசனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது முகநூல் கணக்கை முடக்கி தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement