காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! எச்சரித்த தாயிடம் டீல் பேசிய வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! எச்சரித்த தாயிடம் டீல் பேசிய வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!


yong man abused young girl

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 11 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவந்த கோகுல் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கோகுல், சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாகவும், இதனால் உடனடியாக நான் சொல்லும் இடத்திற்கு நீ வரவேண்டும் என கூறியுள்ளார்.

கோகுலின் பேச்சை நம்பி தனியார் விடுதியில் கோகுல் தங்கியிருந்த அறைக்கு சென்ற மாணவிக்கு ஹோட்டல் அறையிலேயே வைத்து கோகுல் தாலி கட்டி அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து பலமுறை சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனையடுத்து அந்த மாணவி தனது காதல் விசயத்தை தாயிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கோகுல் குறித்து சிறுமியின் தாயார் விசாரித்தபோது கோகுல் வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மகன் என்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து மாணவியின் தாய் எச்சரித்துள்ளார். இந்தநிலையில் சில நாட்கள் கழித்து சிறுமியின் தாய்க்கு செல்போனில் அழைத்த கோகுல், தனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், பணம் தரவில்லை என்றால் உங்கள் மகளுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.

தன்னிடம் பணம் இல்லாததாக மாணவியின் தாய் மறுத்த நிலையில், பணம் இல்லை என்றால் பரவாயில்லை தான் கூப்பிடும் இடத்திற்கு வருமாறு தவறான நோக்கத்துடன் சிறுமியின் தாயுடனும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர்.