கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா.?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா.?



work at home for corona


கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், பார்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆரம்பத்திலிருந்தே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை கொரோனா தமிழகத்தில் நுழையாமல் இருக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் விடுமுறை அறிவித்து வருகின்றன. சென்னையில் அதிகப்படியான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ், எச்.சி.எல். ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களது ஊழியர்களில் 60 சதவீதத்தினரை நேற்று முதல் நேரடியாக வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்துள்ளது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள பல பெரிய  நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.