சாலை ஓரத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.! மகளிர் போலீசார் செய்த நெகிழ்ச்சி செயல்.!

சாலை ஓரத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.! மகளிர் போலீசார் செய்த நெகிழ்ச்சி செயல்.!



women police got delivery for mentally affected women

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகளிர் போலீசார் பிரசவம் பார்த்து தாயையும்  குழந்தையையும் காப்பாற்றியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவர் அங்கேயே தங்கியிருந்துள்ளார். அவர் யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காமலும், யாராவது அவருக்கு உணவு கொடுத்தால்  மட்டுமே வாங்கி சாப்பிட்டு அங்கேயே இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் பெரிய நைட்டி மட்டுமே அணிந்திருந்தால் அவர் கர்ப்பமாக இருந்தது வெளியே தெரியவில்லை. இந்தநிலையில், அப்பகுதி முதல்நிலை தலைமை காவலர் சுகுனா என்பவர் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரை வழியாக சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்து கொண்டு வலியால் துடித்தவாறு அழுதுகொண்டு இருந்துள்ளார்.

அவர் பிரசவ வலியால் துடிப்பதை உணர்ந்த சுகுனா,  அவர் பணிபுரியும் காவல் நிலையத்துக்கு தொடர்புகொண்டு சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து தரையில் கிடந்துள்ளது.

பின்னர்108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அப்பெண்ணை பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அப்பெண்ணிற்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் காவல் ஆய்வாளர் அனுப்பிவைத்தார். இந்தநிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற காரணமாக இருந்தவரை போலீஸார் தேடி வந்தனர்.

delivery

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாலக்கரையைச் சேர்ந்தவர் ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது  தெரியவந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீஸார் பாலக்கரைக்கு சென்று அங்கிருந்த ஜான் என்ற 40 வயது நிரம்பியவரை பிடித்து விசாரித்த போது, அவர் இந்த பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். பிரசவம் பார்த்த மகளிர் காவலர்களுக்கு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.