அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீஸ் தற்கொலை!
திருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் இவரது மகள் பர்வின். இவர் திருப்பூர் மாவட்ட காவல்துறையில் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
அவர் திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அங்காளபரமேஸ்வரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இரவு 7:30 மணி அளவில் விஷத்தை குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.