நள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.!

நள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.!


women-gangraped-in-front-of-husband

ஆந்திர மாநிலம் ஜாமின் நகர் தாண்டா என்னும் மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் நாயக். இவரும் இவரது மனைவியும் அதே பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு டியூட்டிக்கு இருவரும் வேலைக்கு வந்துள்ளனர்.

அப்போது சுமார் இரவு 12 மணியளவில் 2 பைக்கில் 4 மர்ம நபர்கள் பங்களாவிற்குள் நுழைந்துள்ளனர். அதனையடுத்து அந்த கும்பல் நாகேஷ்சின் கையை கட்டியது மட்டுமின்றி அவரை அடித்து உதைத்து விட்டு அவர் கண் முன்னே அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கணவனின் கண் முன்னே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த தம்பதியினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் ஆரம்பத்தில் போலீசார் எந்த கவனமும் செலுத்தாத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதனையடுத்து இந்த கொடூர சம்பவம் குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில், அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.மேலும் படுகாயமடைந்த நாகேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.