தமிழகம்

கணவனை இழந்த சோகத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு...

Summary:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(31)- செல்வி(26) தம்பதியின

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(31)- செல்வி(26) தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா (5), மாதேஷ் (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சங்கரநாராயணன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதன்பின் செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துள்ளார். இதனை கவனித்த செல்வியின் தாய் எதற்காக நகைகளை கழற்றி வைக்கிறாய் என கேட்டுள்ளார்.

அதற்கு செல்வி சும்மா தான் கழற்றி வைக்கின்றேன் என்று கூறியுள்ளார். அதன்பின் தனது குழந்தைகள் இரண்டையும் அழைத்து கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகு நேரம் ஆகியும் வெளியே சென்ற மகள், பேர குழந்தைகள் வராததால் அவர்களை தேடி சென்றுள்ளார் செல்வியின் தாய்.

அப்போது ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் மகள் மற்றும் பேரக்குழந்தைகள்  இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement