தமிழகம்

லிஸ்டில் பல பெண்கள்.. எல்லோருக்கும் ஆபாச புகைப்படம்.. ஆசைவார்த்தை கூறி வரவைத்து ஆப்பு வைத்து அனுப்பிய பெண்..

Summary:

முகநூலில் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை பெண் ஒருவர் லாவகாம பேசி வரவழைத்து தர்மடி கொடுத்த சம்பவம் தேனி அருகே நடந்துள்ளது.

முகநூலில் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை பெண் ஒருவர் லாவகாம பேசி வரவழைத்து தர்மடி கொடுத்த சம்பவம் தேனி அருகே நடந்துள்ளது.

தேனி மாவட்டம் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் குடும்பத்தினர் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேஸ்வரியின் தோழி ஒருவருக்கு தேனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி, அவருக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது தோழி ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். ராஜேஸ்வரி இதற்கு முன்பு கடந்த ஒராண்டிற்கு முன்பாக, ஃபேஸ்புக்கில் தனக்கு தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை லாவகமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து புகழ்பெற்றவர்.

இந்நிலையில் தனது தோழிக்கு ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி, இந்த பிரச்சனையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி, அந்த இளைஞரின் முகநூல் முகவரியை பெற்று, அந்த நபருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இளம் பெண் ஒருவர் தனது வலையில் விழுந்துவிட்டதாக நினைத்து அந்த இளைஞரும் ராஜேஸ்வரியிடம் பேச தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் உன்னை பார்க்கவேண்டும் என அந்த இளைஞர் ராஜேஸ்வரியிடம் கூற, அவரும் தனது ஊர் முகவரியை கொடுத்து அங்கு வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞர் 30 நிமிடத்தில் ராஜேஸ்வரி சொன்ன இடத்திற்கு வந்துள்ளார். இதற்கிடையில் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் தயாராக இருந்த ராஜேஸ்வரி, அந்த இளைஞர் அங்கு வந்ததும் அவரை மடக்கி பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்.

மேலும், அந்த இளைஞரின் தொலைபேசியை வாங்கி சோதனை செய்தபோது இதேபோன்று பல பெண்களுக்கு அவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுபோன்று இனி தவறு செய்யமாட்டேன் என அந்த இளைஞர் காலில் விழுந்து கெஞ்சியதை அடுத்து, அவரின் எதிர்காலம் கருதி அந்த இளைஞரை அவர்கள் அங்கிருந்து அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில் பேஸ்புக் மூலம்  இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தக்க பாடம் புகட்டிய பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement