6 வருட கள்ளக்காதலுக்கு கத்தியால் பதில் சொன்ன கள்ளக்காதலன்... துள்ளத்துடிக்க நடந்த வெறித்தனம்..!
6 வருட கள்ளக்காதலுக்கு கத்தியால் பதில் சொன்ன கள்ளக்காதலன்... துள்ளத்துடிக்க நடந்த வெறித்தனம்..!

பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியதில் வாலிபர் ஒருவர், பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்காபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி அமராவதி (வயது 33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருக்கும் கடந்த 6 வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சூளகிரியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வடிவேலு வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அமராவதிக்கும், வடிவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமுற்ற வடிவேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதியை குத்தியுள்ளார். இதனால் அமராவதி மயங்கிடவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அமராவதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வடிவேலுவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.