சேலம் பேருந்து நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து... அதிர்ச்சி சம்பவம்...!!Woman stabbed at Salem bus station...

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் ஊர் காவல் படையைச் பெண் காவலரை‌கத்தியால் குத்திய சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஊர் காவல் படையில் பெண் காவலராகப் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று பணி முடிந்து சேலம் பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது, சதீஸ்குமார் என்ற நபர் அஞ்சலி தேவியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பி சென்றார். காயங்களுடன் மீட்கப்பட்ட அஞ்சலி தேவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலிதேவி கொடுத்த வாக்குமூலத்தில் நியாய விலை கடையில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணம் வாங்கினான். திரும்ப பணம் கேட்டு அவன் மேல் கேஸ் கொடுத்தேன். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தான்  என்று கூறியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.