தமிழகம் காதல் – உறவுகள்

கயிற்றில் கட்டி ஒருகுழந்தை, இடுப்பில் ஒரு குழந்தையுடன் தெருத்தெருவாக அலையும் பெண்! வெளியான சோக பின்னணி!

Summary:

wife search escaping husband in madurai

திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பபிதா. 30 வயது நிறைந்த கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இவர் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்தவந்துள்ளார் .அப்பொழுது அவருக்கு மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.

அதனை தொடர்ந்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் அவர்களுக்கு தற்போது 3 வயதில் லிங்கேஷ்வரன், 4 வயதில் தன மீனாட்சி என இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு சாதியை காரணம் காட்டி, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுள்ளார்.. இந்நிலையில் இதுகுறித்து பபிதா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷை கண்டுபிடித்து சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுரேஷ் மாயமாகியுள்ளார். இந்நிலையில்  பபிதா தேவையான உடமைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு, மகனை ஒரு கயிற்றால் முந்தானையில் முடிந்து கொண்டும், மற்றொரு குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டும் மதுரை வீதிகளில் தனது கணவரை தேடி அலைந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக சாப்பிடாமல் இருந்ததால் அவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியினா் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தனா். மேலும் இதைத்தொடா்ந்து மகளிா் போலீஸாா் அந்த பெண்ணிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உசிலம்பட்டி மகளிா் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினா்.மேலும் உசிலம்பட்டிக்கு அனுப்பியும் வைத்தனர்.
 


Advertisement