மனைவி பிரிந்து சென்றதால் கணவரை தாக்கிய உறவினர்கள்!

மனைவி பிரிந்து சென்றதால் கணவரை தாக்கிய உறவினர்கள்!Wife relatives attack husband in Chennai

சென்னை அகரம் பகுதியை சேர்ந்தவர் சையது இம்ரான். ஆட்டோ ஓட்டுனர் ஆன இவருக்கு சகிலா என்று மனைவியும், 6 மாத ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

Husband and wife problem

இந்த நிலையில் நேற்று ஷகிலாவின் உடைகள் அனைத்தையும் அவரது வீட்டிற்கு இம்ரான் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகிலாவின் உறவினர்கள் நேற்று இரவு 11 மணியளவில் இம்ரானின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை, கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சையது இம்ரான் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Husband and wife problem

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தால் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்