பலத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்! மர்ம மரணத்தில் வெளியான திடுக்கிடும் பின்னணிகள்!

Summary:

Wife planned to kill husband for illegal love

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் சமீபத்தில் சாந்தி  ஏரிக்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தனது கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என அவரது மாமனார் குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் மகனைத் தேடி ஏரிக்கரைக்கு சென்றபோது அங்கு மரமொன்றில் கார்த்திகேயன் பிணமாக தொங்கியுள்ளார்.

மேலும் அவரது உடம்பில் பலத்த காயங்கள் இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதில் கார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் தங்கமணி. அவர் அடிக்கடி கார்த்திகேயனின் வீட்டிற்கு  சென்றுவந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும், சாந்திக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து கார்த்திகேயனுக்கு தெரியவந்த நிலையில், தங்களுக்கு இடையூறாக உள்ள கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட சாந்தி மற்றும் தங்கமணி முடிவு செய்துள்ளனர். 

அதன்படி தங்கமணியும், அவரது நண்பருமான ராமச்சந்திரன் இருவரும் கார்த்திகேயனை வரவழைத்து அவருக்கு அதிகளவு மதுவை ஊற்றிகொடுத்து போதையாகியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்குள்ள மரத்தில் சடலமாக தொங்க விட்டுவிட்டு தப்பிவிட்டனர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் சாந்தி, தங்கமணி மற்றும் அவரது நண்பர் ராமசந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement