தமிழகம்

கணவனின் நண்பனுடன் கட்டிலில் உல்லாசம்..! கண்டுபிடித்த கணவன்..! காரை ஏற்றி கொலை செய்த மனைவி..! வெளியான பகீர் தகவல்.!

Summary:

Wife killed husband with illegal partner

கள்ள காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காட்டேரி குப்பம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு கந்தசாமி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது  மோதியது, இந்த விபத்தில் படுகாயமடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கந்தசாமி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய் தனது மகன் இ றப்பதற்கு முன்னால் செல்போனில் பேசிய மரண வாக்குமூலம் என்று கூறி ஒரு ஆடியோ ஒன்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பத்து நிமிடம் ஓடும் அந்த ஆடியோ கந்தசாமியின் வழக்கையே திசை திருப்பியது. அந்த ஆடியோவில், விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியின் சகோதரனும், தனது மனைவியுடன் நெருக்கமாக பழகி வரும் ஓட்டுனர் ஸ்ரீதர் என்பவரும் தன்னை தாக்கியதாகவும் தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர்கள்தான் காரணம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.


இதனை அடுத்து கந்தசாமி விபத்துக்குள்ளான கார் ஓட்டுனர் பிரவீன் குமார் என்பவரை போலீசார் விசாரித்தபோது விபத்துக்கு பின்னர் பிரவீன்குமார் ஸ்ரீதரிடம் பேசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதரை வி சாரித்த போது பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கந்தசாமி தனது நண்பர் என்றும், தன்னை அவரது வீட்டிற்கு பலமுறை அழைத்து சென்றுள்ளதாகவும். அப்போது  தின்பண்டங்கள் மற்றும் புவனேஸ்வரிக்கு பிடித்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரியை தான் கவர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறியதாகவும், ஒரு கட்டத்தில் மனைவியின் தவறான நடவடிக்கை கந்தசாமிக்கு தெரியவந்ததால் தனது மனைவியை அவர் கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புவனேஸ்வரி அவரது  அம்மா வீட்டுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

அம்மா வீட்டுக்கு சென்ற புவனேஸ்வரி தனது சகோதரரிடம் தனது கணவர் தன்னை சந்தேகப்பட்டு அடிப்பதாக  கூறியுள்ளார். இதனால்தான் புவனேஸ்வரியின் சகோதரர் கந்தசாமியை தாக்கியுள்ளார்.

இப்படியே விட்டால் கந்தசாமி தமது உறவுக்கு இடைஞ்சலாக இருப்பான் என்பதாலும், அவனை தீத்துக்கட்ட திட்டம் போட்டு அவரை கார் ஏற்றி கொலை செய்ததாகவும் ஸ்ரீதர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement