இதனால் தான் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்! போலீசாரை தேடி வந்து வாக்குமூலம் கொடுத்த மனைவி!
இதனால் தான் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்! போலீசாரை தேடி வந்து வாக்குமூலம் கொடுத்த மனைவி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். 44 வயது நிரம்பிய இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி மேரியிடம் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் பிரான்சிஸ், மேரியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மேரி ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து பிரான்சிசை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார்.
இதனை அடுத்து தலைமறைவாக இருந்த மேரியை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த மேரி கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். பின்னர் போலீசில் சரணடைந்துள்ளார்.
மேரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சேவியர் தினதோறும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது பிள்ளைகளையும் துன்புறுத்துவதாகவும், நான் கூலிவேலை செய்து பிள்ளைகளை படிக்கவைத்து வந்தேன். ஆனால் நான் கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை, மது குடிப்பதற்கு கேட்டு தகராறில் ஈடுபடுவார்.
இதனால் தான் தைலயில் கல்லை போட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டேன் என தெரிவித்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.