என்னது நடிகர் SJ சூர்யாவுக்கு திருமணமா... வைரல் பதிவிற்கு நடிகர் விளக்கம்...
கணவரை தீர்த்துக்கட்டி, துப்பட்டாவால் தூக்கில் தொங்கவிட்ட மனைவி!! காரணத்தை கேட்டு மிரண்டுபோன போலீசார்!!
wife killed husband by illegal relationship

வேலூரில் வசித்து வந்தவர் சரவணன். இவர் சைக்கிள் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி பவானி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து போதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு சரவணன் தனது வீட்டில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் அவரது மனைவியும் கணவர் தன்னிடம் சண்டை போட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறிவந்துள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளிவந்தது. அதில் சரவணன் கழுத்தை நெரித்தும், கடுமையாக தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
பின்னர் அவர் தான்தான் தனது கணவரை கொன்றதாக ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, நான் வேலாயுதம் என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் வேலாயுததிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவரும் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து செல்வார் நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தோம், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் என்னிடம் தகராறு செய்த நிலையில் வேலாயுதம் அவரை கண்டித்தார். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை.
மேலும் எங்கள் இருவரையும் தவறாக பேசிவந்தார். இந்நிலையில் எங்களது உறவிற்கு அவர் இடையூறாக இருப்பதால் கொலை செய்ய முடிவு செய்து, குடிபோதையில் இருந்த அவரை நானும் வேலாயுதமும் சேர்ந்த பிளாஸ்டிக் ஒயர் மூலம் கழுத்தை நெரித்து பிளாஸ்டிக் பைப் மூலம் அடித்தும் கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வேலாயுதம் மற்றும் பவானி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது