தமிழகம்

தாய் செய்த லீலைகளை காட்டிக் கொடுத்த பிள்ளைகள்.! அவசர அவசரமாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

திருப்பத்தூரில் கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நடாகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் பிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு9 வயதில் ஒரு ஆண் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசிகுமார் தன் குழந்தைகளுன் தீக்குளித்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் உயிருக்கு போராடிய சசிக்குமார் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனைவி பிரியா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். ஆனால் சசிகுமார் உயிரிழப்பதற்கு முன் நீபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், தன் மீதும் தனது பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தன் மனைவி பிரியா தான் என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் பிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சசிக்குமார் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி தன் குழந்தைகள் மற்றும் மனைவியிடம் பேசுவதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், பிரியா அந்த ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பல ஆண்களுடன் நண்பராகியுள்ளார். அதன் பின் அதில் சில ஆண்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தாய் டிக்டாக்கில் திறமை காட்டுவதும் புதிது புதிதாக ஆண்களுடன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவசர அவசரமாக விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது குழந்தைகள் சொல்வது போன்று தான் மனைவியின் நடவடிக்கை இருந்துள்ளது. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். இந்தநிலையில் கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், கணவனை கொலை செய்வதற்காக வீட்டில் பெட்ரோலை வாங்கி மறைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தினத்தன்று வீட்டில் உள்ளவர்கள் தூங்கிய பின் தன்னை காட்டிக் கொடுத்த பிள்ளைகள் மற்றும் கணவன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தான் தற்கொலை என நடகாமடியதாக கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement