தமிழகம்

பால்கொடுக்கும்போது ஏற்பட்ட மார்பு வலியால், தாய் செய்த கொடூர செயல்!.கதறும் கணவன்!.

Summary:

பால்கொடுக்கும்போது ஏற்பட்ட மார்பு வலியால், தாய் செய்த கொடூர செயல்!.கதறும் கணவன்!.

சென்னையை சேர்ந்த வெங்கண்ணா - உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சார்விக் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று உமா கூறியதன்பேரில் வெங்கண்ணா, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,

அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், நீங்கள் குழந்தையை ஏரியில் வீசியதை அந்தப் பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர் என்று காவல்துறையினர் உமாவிடம் கேட்டதும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை காணாமல் போனதிலிருந்து உமா அழாமல் இருந்தார். இதனால் சந்தேகத்தில் போலீசார் இந்தக் கேள்வியைக் கேட்டபிறகு, அவரின் கண்கள் கலங்கின. அதன்பிறகு அவரே உண்மையை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது அவருக்கு மார்பு வலித்துள்ளது. அதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய உமாவுக்கு, அப்டித்தான் இருக்கும் என அறிவுரைகளும், சில டிப்ஸ்களையும் கூறினர். அதையெல்லாம் அவர் பின்பற்றினாலும் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், குழந்தைக்குப் பால் கொடுப்பதை அவர் நிறுத்தியுள்ளார். பாலுக்காக குழந்தை அழுதபோது வலி காரணமாக அவர் பால் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்தச் சமயத்தில்தான் வலிக்கான மாத்திரைகள் அவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை, வெங்கண்ணா சாப்பிட அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் குழந்தையை அருகில் இருந்த ஏரிக்குள் தூக்கி வீசியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை அறிந்த உமாவின் கணவர் கதறி அழுதுள்ளார். உமாவை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement