வெளிநாட்டிலிருந்து ஆசையாக வந்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வசமாக சிக்கியதால் எடுத்த அதிரடி முடிவு!

வெளிநாட்டிலிருந்து ஆசையாக வந்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வசமாக சிக்கியதால் எடுத்த அதிரடி முடிவு!


wife ilegal relationship with sub inspector

சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதியினருக்கு இருகுழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்னையில் தனியாக இருந்த நர்மதாவிற்கு திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐயுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜனார்த்தனன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் அனைத்தையும் அந்த எஸ்ஐயிடம் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஜனார்தனுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனார்த்தனன் நர்மதாவை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் நர்மதா எஸ்ஐ இருவரும் தனியாக சந்தித்தபோது அவரை பின்தொடர்ந்து ஜனார்த்தனன்  போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அதைக் கொண்டு அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

illegal affairs

அந்த புகாரில் எனது மனைவி நர்மதாவிற்கும், திருநின்றவூர் எஸ்ஐக்கும் தகாத உறவு உள்ளது. அதை தட்டி கேட்டபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும்  அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்த போது நான் அவர்களை பின் தொடர்ந்து சென்று போட்டோ எடுத்துள்ளேன்.

என் மனைவி நர்மதா குழந்தைகள் பெயரில் நான் வாங்கிய 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐ ராஜேஷிடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தர வேண்டும் என ஜனார்த்தனன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.